தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் விரைவு பேருந்தை இயக்க உத்தரவு..!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வகை 2 இல் உள்ள கடலூர், தருமபுரி ,கன்னியாகுமரியில் சிவகங்கை. ராணிப்பேட்டை .வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்தை தொடங்குவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் 11 மாவட்டங்கள் தவிர சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் இடையே பேருந்து சேவை கிடைக்கும்.






