திருமுருகன்பூண்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கணேஷ்..!
திருமுருகன்பூண்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கணேஷ் வழங்கினார்.
அ.இ.அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஏ.எஸ் கணேஷ் தலைமையில் அவர் தனது சொந்த செலவில் திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் வேலைசெய்யும் சுகாதார பணியாளர்களுக்கு மதியம் முட்டை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் கலந்துகொண்டு 130 தூய்மைப் பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கினார். தொடர்ந்து அவிநாசி வரை ரோட்டோரத்தில் தங்கியிருந்தவர்கள் 70 பேருக்கும் முட்டைப்பிரியாணி வழங்கப்பட்டது.






