--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு- புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

3

கொரொனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசளிப்போம் என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் கடந்த 16ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

தடுப்பூசி திருவிழாவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் அதனை மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுமுடிவு செய்துள்ள நிலையில் மக்களின் தடுப்பூசி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல் 100% தடுப்பூசி போட்ட முதல் பத்து கிராமங்களுக்கு விருது வழங்குவோம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon