உலகின் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 விழுக்காடு ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களின் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.

 

இதில் 66 விழுக்காடு ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கொரொனா தொற்று காலத்தில் இவரது செல்வாக்கு சற்று சரிவாக கூறப்பட்ட நிலையில் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார் .

 

இவருக்கு அடுத்தபடியாக 65 விழுக்காடு ஆதரவுடன் இத்தாலி பிரதமர், இரண்டாவது இடத்திலும் 63 விழுக்காடு ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


Leave a Reply