நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோகா சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார்.

 

அந்நகரில் உள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் ரஜினிகாந்துக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதே மருத்துவமனையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

அமெரிக்காவில் ஏற்கனவே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருமகன் தனுஷ் உள்ளனர். அவர்கள் ரஜினிகாந்துடன் இணைந்து கொள்ள உள்ளனர் .மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்புவார்.


Leave a Reply