தமிழகத்தில் கணிசமாக குறைந்தது கொரோனா பாதிப்பு: 15,108  பேருக்கு  தொற்று உறுதி..374 பேர் உயிரிழப்பு!

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


தமிழகத்தில் தற்போது 1,62,073   பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 15,108  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 27,463   பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply