பிரதமர் மோடி தாடியை சவரம் செய்ய 100 ரூபாயை அனுப்பிய நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பிரதமர் மோடி தாடியை சவரம் செய்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து மகாராஷ்டிராவை சேர்ந்த டீ கடைக்காரர் நூறு ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலம் பகுதியை சேர்ந்த அனில் என்று டீக்கடை உரிமையாளர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மணியார்டர் மூலம் 100 ரூபாய் அனுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர் பிரதமர் மோடி எதையாவது அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை தான் அதிகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தி மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். குடும்பத்தினரை இழந்த மக்களுக்கும், கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply