28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம் செய்த நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாகலாந்தில் முதியவர் ஒருவருக்கு 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பழங்கால ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுத்த கதையை கேட்டிருப்போம். தற்போதுள்ள பொருளாதார நிலையில் ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது பலருக்கும் பெரும் சாதனையாக இருக்கிறது.

 

அப்படி இருக்கையில் 36 மனைவிகளை திருமணம் செய்துவிட்டு தற்போது 37-வது திருமணத்தையும் செய்துள்ளார் முதியவர் ஒருவர். 28 மனைவிகள் 135 குழந்தைகள் மற்றும் 126 பேரை குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணமாக இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார்.

 

இது குறித்த வீடியோ ஒன்றை நாகலாந்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரல் ஆகியுள்ளது.


Leave a Reply