குழந்தைகளுக்குக் கொரொனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


குழந்தைகளுக்குக் கொரொனா தொற்று ஏற்பட்டால் கையில் பல்சாக்சி மீட்டர் உடன் ஆறு நிமிடங்களுக்கு நடக்க வைத்து பரிசோதனை செய்வது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகள் இயக்குனருமான டிஜிஎச்எஸ் வெளியிட்டுள்ளது.

 

அறிகுறி இல்லாத அல்லது லேசான பாதிப்பு உடையவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் பின் விளைவிப்பதால் மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சரியான நேரத்தில் சரியான அளவில் ஸ்டீராய்டு மருந்துகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மருந்து குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதின்பருவ பிள்ளைகளுக்கு இருமல் இருந்தால் வெந்நீரால் வாய் கொப்பளித்தல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 மில்லி கிராம் பாரசீட்டாமல் மாத்திரைகளை 4 அல்லது 6 ஒரு மணி நேர இடைவெளியில் தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply