மகாராஷ்டிராவுக்கு 15 பேரிடர் மீட்புக்குழுக்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


காராஷ்டிராவில் கனமழை பெய்துவரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 15 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

 

மேலும் ஒரு வாரத்திற்கு இது நீடிக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 15 குழுக்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு குழுக்களும் தானே, சிந்துவின் சாய்க்காடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply