நோயாளிகளை கண்காணிக்க ரோபோ நர்ஸ்..!
முதியவர்கள் மற்றும் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹாங்காங்கை சேர்ந்த குழுவினர் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
செவிலியர் போன்ற நீல நிற உடை அணிந்திருக்கும் இந்த ரோபோவிற்கு ஆசிய அம்சங்கள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோபோ தன் மார்பு பகுதியில் உள்ள கருவியின் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது ஒரு செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை கண்டறிந்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க முடியுமென நிறுவனர் தெரிவித்துள்ளார்.






