வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரொனா பேரிடர் ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். புதிய கல்வியாண்டுக்கான கற்றல், கற்பித்தல் பணிகளுக்காக தலைமை ஆசிரியர்கள் பணியாளர்கள் வரும் 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம், பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது உயர் கல்வியில் சேர்வதற்கான சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காகவும் கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கான நலத்திட்டங்கள் பள்ளி வளாகம் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கல்வி தொலைக்காட்சிக்கான பணி போன்றவற்றுக்கான அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் .
புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் பணியாளர்கள் வரும் 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தருவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.






