அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இருமடங்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இருமாதங்களில் இரு மடங்கு அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே, மாதத்திற்கான அரிசி அடுத்த மாதம் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கொரொனா இரண்டாம் அலையில் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் அரிசியுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே, ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்றும் மே மாதத்திற்கான அரிசியை இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






