கொரோனா பாதிக்கப்பட்ட பெண் மாயம்..! அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் காணாமல் போன நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண் கொரொனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத்திணறல் இருந்தால் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு உணவு கொடுத்து வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு மனைவி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடியும் சுனிதா கிடைக்காததால் சுனிதா மாயமானது குறித்து சுனிதாவின் கணவர் கடந்த 31ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊரடங்கு காரணமாகவும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் எட்டாவது மாடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு வந்த தனது மனைவியின் உடல் தான் என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






