--- --:--:-- --

இந்தியாவிலேயே முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ..!

6

ந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் கொரொனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 50 வயது நபருக்கு கொரொனா உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து குணமடைந்த நிலையில் அவருக் குகாது பகுதியில் பூஞ்சை உருவாகியுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு சோதனை மேற்கொண்டதில் தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது உறுதியானது.

 

கொரொனா நோயாளிகளுக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த தோல் பூஞ்சையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon