பலூனில் நாயை கட்டி பறக்க விட்ட பிரபல யூடியூபருக்கு எதிர்ப்பு..!
ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்க விட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல யூடியூப்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இது யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
சமீபத்தில் இவர் ஹீலியம் பலூனில் தனது நாய் குட்டியை கட்டி பறக்க விட்டபடி எடுத்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் நாயை துன்புறுத்துவதாக கருத்து தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து அந்த வீடியோவை டெலிட் செய்தார். உரிய பாதுகாப்பு வசதிகளுடன் தான் நாயை பறக்க விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் தெற்கு டெல்லியில் உள்ள மாநகர காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.






