பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகை அடிப்படையில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பு மையம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்த பட்டிருக்கும் நிலையில் வரும் மாதங்களில் தடுப்பூசி தேவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மத்திய அரசின் தற்சார்பு கொள்கைப்படி செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மையத்தின் உற்பத்தியை தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே 700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த தடுப்பூசி தேவையும் பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






