--- --:--:-- --

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் “40 ஆக்சிஜன் படுக்கை  200 படுக்கை”! கொரோனா கேர் சென்டர்  ரெடி!

IMG_20210526_223330
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார்
மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

நன்கொடையாளர்கள் வழங்கிய ஒரு கோடி!

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  அரசுடன் இணைந்து அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவிட் கேர் சென்டர் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து  அனுப்பர்பாளையம் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பரணி பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன் தலைமையில் , பள்ளி வளர்ச்சிக் குழு செயலாளர் சிட்டி வெங்கடாச்சலம் அக்ஷ்யா டிரஸ்ட் செயலாளர் சுப்ரீம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் அக்ஷ்யா டிரஸ்ட் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில்  ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவதுடன், அவர்களது விலைமதிப்பற்ற உயிரும், வாழ்வும் காப்பாற்றப்படும் என்ற அடிப்படையில் கோவிட் 19 கொரோனா கேர் சென்டர் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு  பள்ளி வளாகத்தில் திறக்கப்படவுள்ளது.
இதனை தமிழக அமைச்சர் செய்திதுறை அமைச்சர் மு.பெ சாமிநாதன்,  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், கலெக்டர் விஜயகாத்திகேயன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

இதில் 200 படுக்கை வசதி  மட்டுமல்லாமல் 40 படுக்கை ஆக்சிஜனுடன் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதற்காக அரசு பள்ளியை போர்க்கால அடிப்படையில் சரி செய்யும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் புதிய எலக்ட்ரிக் கனெக்சன், ஃபேன் மற்றும் லைட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சிசன் செரிவூட்டும்  10 கருவிகள்

மேலும் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கப்பட்டு ஐந்து அறைகளில் சிகிச்சை பெறக்கூடிய வகையில் சுமார் 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குழாய் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்புடன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நடமாடும் ஆக்சிசன் செரிவூட்டும்  10 கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. இத்துடன் அனைத்து வசதிகளுடன் கூடிய 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து அறைகளுக்கும் தண்ணீர் குழாய்கள் அனைத்து தளங்களுக்கும் வாஷ்பேஷன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்படுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் நோயாளிகளுக்காக 15 நிரந்தர கழிவறைகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

மொபைல் டாய்லெட்டுகள்

 

இத்துடன், நோயாளிகள் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆக்சிசன் படுக்கையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக  ஒவ்வொரு அறைக்கும்  வெளியே மொபைல் டாய்லெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் இருக்கின்ற காரணத்தினால் நோயாளிகளும் அவரது உறவினர்களையும் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு 600 அடி நீளம் 6 அடி உயரம் கொண்ட டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறமையான சமையல் கலைஞர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் செட் அமைக்கப்பட்டு மூன்று வேலையும் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய வகையிலே இரண்டு வேலை அசைவ உணவும், ஒருவேளை சைவ உணவும், சுண்டல் மற்றும் டீ யும் வழங்கப்பட இருக்கிறது .

இதுபோக  மருத்துவர்கள் வசதி, செவிலியர்கள் வசதி, களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பனியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியம்  செய்யப்பட்டுள்ளது.

இந்த உன்னத மக்கள் சேவையில் சேவை மனம் கொண்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் இந்தக் கொரோணா என்கிற அரக்கனை கொன்று குவிப்போம், என்பதன் அடிப்படையில் நீங்களும் இணையலாம், திட்ட மதிப்பு அதிகம் என்பதால் உதவிகள் வரவேற்கப்படுகின்றன.

நீங்களும் உதவி செய்யலாம்

அதன்படி  நீங்கள், பணமாக, பொருளாக அல்லது வேறு விதத்தில் உதவலாம், விருப்பம் உள்ள நல் உள்ளங்கள் கீழ்க்கண்ட அக்ஷ்யா டிரஸ்ட் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம் மற்றும் செக்கோ அல்லது டிடி எடுத்து நீங்களே அனுப்பர்பாளையம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கக் கூடிய அலுவலகத்தில் நேரடியாக வந்து வழங்கலாம்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்கண்ட 96296 82999, 98946 14706, 80125 52255 ஆகிய எண்களுக்கு  தொடர்பு கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon