செவிலியர்களுக்கு தரமான பிபிஇ கிட் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு..!
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரமான முழு உடல் கவசம், முக கவசம் வழங்கப்படவில்லை என செவிலியர் ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
கொரொனா வுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்கள், செவிலியர்களுக்கு தரமற்ற உடல் கவசம், முக கவசம் வழங்கப்படுவது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தங்களுக்கு இழப்பீடு எதுவும் தேவையில்லை என்றும் தரமான பிபிஇ கிட் தேவை என்றும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





