நேற்றைய விட இன்று பாதிப்பு சற்று கம்மி: தமிழகத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…448 பேர் பலி!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது .
அதன்படி, தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,84,278 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 25,776 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15, லட்சத்து 2 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 5,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





