கொரொனா நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
சென்னை தாம்பரம் அருகே கொரொனா நோயாளி மருத்துவமனையில் மேல்தளத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். கொரொனா பாதித்த ராஜேந்திரன் என்பவருக்கு சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிசன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ராஜேந்திரனை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. ஒரு இரவு மட்டும் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டு விட்டு உறவினர்கள் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ராஜேந்திரன் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு மருத்துவமனை தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் விசாரித்தபோது அவர் மேல்தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
ஆக்ஸிஜன் வழங்காததால் தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






