--- --:--:-- --

பிரபல எழுத்தாளரான கி.ராஜநாராயணன் காலமானார்..!

6

கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 99.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் கி ராஜநாராயணன் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து வந்த அவர் பின்னர் எழுத்தாளராக மாறினார்.

 

அவர் எழுதிய சிறுகதை 1958 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கரிசல் கதைகள் கொத்தை பருத்தி கோபல்ல கிராமம் போன்றவை அவரது முக்கிய படைப்புகளாகும். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்பட்ட ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது. தமிழக அரசின் விருது.

 

கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜநாராயணன் வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பால் காலமானார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon