ஸ்டாலின் படத்தை சுவற்றில் வரைந்து வாழ்த்து தெரிவித்த நபர்..!
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திமுக கொடிக்கம்பத்தில் ஸ்டாலின் படத்தை சுவற்றில் வரைந்து ஆசிரியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார் தாங்கள் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக இருக்கும் செல்வம் என்பவர் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக ஸ்டாலினின் உருவத்தை வரைந்துள்ளார். திமுக கொடி கம்பம் மூலம் ஸ்டாலின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.






