--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

13

மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அந்த மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் மாவட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது7ஆம் தேதிகளில்மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

8, 9 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon