--- --:--:-- --

விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம்..!

12

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 

தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை முதலமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் 14 கோரிக்கைகளை வலியுறுத்தி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் எட்டு வழி சாலை திட்டம். துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை நிறுத்த வேண்டும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .

 

அதோடு கூட்டாட்சி கொள்கைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon