அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை வேட்பாளர் ஏவா, வேலு, தியாகராயநகர் வேட்பாளர் ஜெயின் கருணாநிதி, ஆலந்தூர் வேட்பாளர் அன்பரசன், திருவரம்பூர் வேட்பாளர் பொய்யாமொழி, தூத்துக்குடி வேட்பாளர் கீதாஜீவன் உள்ளிட்டோர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் தங்களின் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.






