இந்தியாவில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது..!
கொரொனா பரவலை பொருத்தவரை மோசமான உலக சாதனையாக இந்தியாவில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இதுவரை எந்த நாட்டிலும் பதிவாகவில்லை. கடந்த 21 ஆம் தேதி அன்று முதன்முறையாக மூன்று லட்சத்தை கடந்த எண்ணிக்கை பத்தாவது நாளில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்நாட்டில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 516 பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.






