ஆடு தவறி விழுந்த கிணற்றில் இருந்த கட்டுவிரியன் பாம்பு..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேல மஞ்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்பவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி கிணற்றில் தவறி விழுந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர் ஆட்டை மீட்க முயற்சி செய்தபோது அதன் அருகிலேயே கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆட்டுக்குட்டியை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அதேபோல கட்டுவிரியன் பாம்பையும் பாதுகாப்பாக எடுத்து பணத்தில் பெற்றுள்ளனர்.






