பிறந்த குழந்தை கிணற்றில் வீசி கொலை..! தாய் மரணம்..!
கருவுற்றிருந்த பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பின் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தினார். ஆயக்குடி பகுதியை சேர்ந்த மங்கையற்கரசி என்பவர் தனது உறவினரான குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அக்கா தம்பி உறவு முறை என்பதால் இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கருவுற்றிருந்த பெண்ணிற்கு பிறந்த மங்கையற்கரசிக்கு அவரது பெற்றோரே பிரசவம் பார்த்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர்.
மேலும் மங்கையர்க்கரசியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பெண்ணின் தாய் தந்தை கணவர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.






