--- --:--:-- --

சென்னை மற்றும் கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு..!

2

நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவீதத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இருப்பினும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகு 15 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

 

கொரொனா பரவல் சங்கிலியை தடுக்க அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கு மேல் கொரொனா பாதிப்பு ஏற்பட்டால் இந்த பகுதிகளில் முழுவதும் அமல்படுத்த வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon