காணாமல் போன வாலிபரை கொலை செய்த 6 பேர்..!
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் காணாமல் போன வாலிபரை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதான கூலித் தொழிலாளி வேலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பெற்றோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன வினோத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் பழைய குற்றவாளி மேடவாக்கத்தை சேர்ந்த ஈஸ்வரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்விரோதம் காரணமாக வினோத்தை கொலை செய்து முட்புதரில் வீசியதாக அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். இதுகுறித்து சடலத்தை மீட்ட போலீசார் இந்த கொலையில் ஈடுபட்ட ஈஸ்வர் மற்றும் அவரது கூட்டாளிகள் மணிகண்டன் அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.






