கோவாக்ஸின் தடுப்பூசி விலை அதிகரிப்பு..!
கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுக்கு ஒரு டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பு ஊசி ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அடிப்படையிலேயே தடுப்பூசிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் ஏற்கனவே மத்திய அரசுக்கு ஒரு டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசியின் விலை 150 ரூபாய்க்கும், விலையில்லா தடுப்பூசி தொடர்ந்து விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கான நிலை 15 முதல் 20 டாலர் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.
ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசு 400 ரூபாய்க்கும், மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.






