--- --:--:-- --

கேரளாவுக்குள் அனுமதி மறுப்பு..! தொழிலாளர்கள் வாக்குவாதம்..!

4

தமிழகத்தில் இருந்து தோட்ட வேலைக்கு செல்பவர்கள் தங்களை கேரளாவுக்குள் அனுமதிக்க கோரி கம்பம் மெட்டு சாலையில் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து குமுளி மலை வழிச்சாலை கம்பம் மெட்டு மலை வழி சாலை என இரு வழிகளிலும் கேரளாவிற்கு செல்லலாம். இன்று காலை தோட்ட வேலைக்கு சென்றவர்கள் இ பாஸ் மற்றும் கொரொனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறி கேரள சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

நேற்று வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென தடுத்து நிறுத்தியதால் தோட்ட வேலைக்கு சென்றவர்கள் தங்களை அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதம் செய்தனர். இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று வேலைக்கு செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் நாளை முதல் உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon