--- --:--:-- --

மூதாட்டியை ஏமாற்றி ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிய பெண்..!

5

விழுப்புரத்தில் மூதாட்டியை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

ஆசாரகுப்பம் கிராமத்தை சேர்ந்த வடமலை என்ற மூதாட்டி விழுப்புரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் தனது கணக்கின் இருப்பு தொகை குறித்து பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பெண் ஒருவர் உதவி செய்துள்ளார்.

 

அதன் பின்னர் மூதாட்டி வங்கி கணக்கில் இருந்து ஐந்து லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் சிறுக சிறுக எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது மூதாட்டியிடம் ஏடிஎம் கார்டை வாங்கிய பெண் அவரிடம் திரும்ப பெற்றுக் கொடுத்தது தெரியவந்தது.

 

இந்த நிலையில் மூதாட்டியை ஏமாற்றி சீதாலட்சுமி என்ற பெண்ணை காவலர்கள் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon