மதுபானத்தில் இறந்து கிடந்த பாம்பு..! குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி..!
அரியலூர் மாவட்டத்தில் மதுபானத்தில் இறந்து கிடந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே இருமுடி குறிச்சியை சேர்ந்த சுரேஷ் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் அங்குள்ள மதுபான கடையில் மது பாட்டில் ஒன்றை வாங்கி பாதியை குடித்துவிட்டு மீதியை வைத்துள்ளார். பின்னர் மீண்டும் குடிக்க அதை எடுத்தபோது பாட்டிலுக்குள் பாம்பு குட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்பாம்பு இறந்து கிடந்த மதுவை குடித்து விட்டோம் என்ற அச்சத்தில் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






