கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம்..!
கொரொனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும். கொரொனா தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதையொட்டி ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் உடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






