--- --:--:-- --

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி..!

8

கேரளாவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஈஸ்டர் தின விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பேச விரும்பிய சிறுமியை வீடியோ காலில் பேச வைத்தார்.

 

தனது தொகுதியான வயநாட்டில் கல்பெட்டா எனும் இடத்தில் ஜீவன் ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற ராகுல் அங்குள்ள குழந்தைகளுடன் மதிய உணவு அருந்தினார்.

 

அப்போது அவரது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் பேசவேண்டும் என அங்கிருந்த ஒரு சிறுமி ராகுலிடம் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை ஏற்ற ராகுல் தனது செல்போனில் வீடியோ கால் மூலம் பிரியங்காவுடன் அந்த சிறுமியை பேச வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon