--- --:--:-- --

அடுத்த ஏழு நாட்களுக்கு மட்டுமே ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு உள்ளதால் அதிர்ச்சி..!

1

மகாராஷ்டிராவில் உள்ள ரத்த வங்கிகளில் மருத்துவ தேவைக்கானா ரத்தம் அடுத்த ஏழு நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பரவல் காரணமாக குருதி கொடை அளிக்க தன்னார்வலர்கள் முன்வராததால் ரத்த வங்கிகளில் ரத்தம் முற்றிலும் குறைந்து உள்ளது.

 

மும்பை உள்ளிட்ட இடங்களில் குருதி கொடையாளர்கள் பெரும்பாலானோர் சாப்ட்வேர் துறையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது வீட்டிலிருந்து பணிபுரிவதால் ரத்ததானம் முற்றாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

பிற நோயாளிகளுக்கான ரத்தம் தேவை அதிகரித்திருப்பதால் அவசர சூழலை கருதி உடனடியாக குருதிக் கொடை அளிக்க முன்வருமாறு தன்னார்வலர்களுக்கு மகாராஷ்டிர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon