--- --:--:-- --

கொரொனா பரவலை பொருத்து உள்ளூர் அளவில் கட்டுப்பாடு..!

8

கொரொனா தொற்று பரவலை பொருத்து உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பரிசோதனைகளை அதிகரித்தல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்துதல் மற்றும் விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட மற்றும் வட்டார அளவிலான உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon