கொரொனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது..!
கொரொனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என தேசிய ரத்தப் பரிமாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை அனுப்பிய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது.
அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பெருந்தொற்று தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவரும் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 28 நாட்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய ரத்த மாற்று கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பெருந் தொற்றுக்கு எதிரான எந்த ஒரு தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் கடைசியாகப் போட்ட தடுப்பூசிக்கு பின்னர் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது எனமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ரத்த மாற்று கவுன்சில் இயக்குனர் சுனில் பிறப்பித்த உத்தரவின்படி தடுப்பூசி போட்டுக் கொள்வோர் முதல் தடுப்பூசி 28 நாட்கள் இரண்டாவது தடுப்பூசி 28 நாட்கள் என 56 நாட்களுக்கு ரத்ததானம் செய்ய முடியாது என தெரிவித்தார்.






