--- --:--:-- --

விவசாயிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார்..!

9

துரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் பரப்புரை செய்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் விவசாயிகளின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திருமங்கலம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

 

வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஆர் பி உதயகுமார் அந்த பகுதியில் இருந்த துவரம்பருப்பை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.

 

அப்போது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon