--- --:--:-- --

60 ஆயிரம் ரூபாய் கட்டினால் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் தருவதாக கூறி மோசடி..!

8

சேலத்தில் 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அழகா புரத்தில் ஆர்கே ப்ரமோட்டர்ஸ் என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வந்த நாகராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேஷ் ஆகியோர் 60 ஆயிரம் ரூபாய் கட்டினால் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் தருவதாகவும் பத்தாயிரம் கொடுத்தால் மோட்டார் சைக்கிள் தருவதாகவும் கவர்ச்சி விளம்பரம் செய்துள்ளனர்.

 

இதை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பணத்தை முதலீடு செய்த நிலையில் மூன்று ஆண்டுகளாக பணமோ, பரிசுப்பொருட்களோ திருப்பி அளிக்காமல் இழுத்தடித்துவிட்டு நிறுவனத்தையும் மூடி விட்டதாக தெரிகிறது.

 

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தந்தை மற்றும் மகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon