--- --:--:-- --

அதிமுக வேட்பாளருக்கு தொகுதி மாற்றப்பட்டதால் ஆதரவாளர்கள் கண்ணீர்..!

7

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மூன்று முறை போட்டியிட்ட தொகுதி தற்போது மாற்றி வழங்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

 

புதுச்சேரிக்கு மாநில செயலாளராக ஓம்சக்தி சேகர் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் இருந்து நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது இவருக்கு உருளையன்பேட்டை தொகுதியில் அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது.

 

நெல்லித்தோப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் தொகுதியை விட்டு செல்லக் கூடாது எனவும் ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனையடுத்து தலைமைக்கு கட்டுப்பட்டு உருளையன்பேட்டையில் வெற்றி பெறுவேன் என ஓம்சக்தி சேகர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon