மாசாஜ் சென்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..!
அட்லாண்டா நகரில் மூன்று மசாஜ் சென்டர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் இயங்கிகொண்டிருந்த ஒரு மசாஜ் சென்டரில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அதே பகுதியில் இருக்கும் இரண்டு மசாஜ் சென்டர்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.






