--- --:--:-- --

“மணல் அள்ளுவதை தடுத்தா அதிகாரி இருக்க மாட்டார்” ஆட்சிக்கு வரும் முன்பே செந்தில் பாலாஜி பேச்சு!

senthil balaji01

ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்தா, அதிகாரி இருக்க மாட்டார் என்று கூறி கரூர் தொகுதி செந்தில் பாலாஜி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது திமுக தலைமைக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, ரவுடிசம், நில அபகரிப்பு அதிகரித்து விடும்; பலமணி நேர மின் தடையை நியாபகம் இருக்கா என்றெல்லாம் ஆளும் அதிமுக சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும் அதிமுக அமைச்சர்கள் பட்டியலிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

 

அதேநேரம், திமுக வந்தால் ரவுடியிசம் பெருகும் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டை வலு சேர்க்கும் வகையில் திமுகவினர் சிலரின் பிரசார பேச்சுகள் அமைந்துவிடுகின்றன. இதற்கு சரியான உதாரணமாக, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பிரசார பேச்சு உள்ளது.

 

கரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் பேசுகையில், ஸ்டாலின் 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அடுத்த 5வது நிமிடத்தில் மாட்டு வண்டிகளை ஆற்றை நோக்கி விடுங்கள். எந்த அதிகாரிகள் உங்களை தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். அப்படி தடுத்தால் என்னை அழையுங்கள். பிறகு அந்த அதிகாரி இருக்க மாட்டார், எனப் பேசினார்.

 

காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்கும் நோக்கில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பிரசார பேச்சு, மணல் திருட்டை ஊக்குவிப்பது போல் இருப்பதாக, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

மக்களுக்கும் தொகுதிக்கும் செய்யப்போகும் திட்டங்கள் பற்றி வாக்குறுதி வழங்கி வாக்கு சேகரிக்காமல், இப்படி அதிகாரிகளை மிரட்டும் தொனியில் திமுக விஐபி வேட்பாளர் பேசியிருப்பது, அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. திமுக தலைமைக்கும் செந்தில் பாலாஜியின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon