அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை இழுத்து வர பயன்படுத்திய கார் பறிமுதல்..!
மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை இழுத்து வர பயன்படுத்திய காவல் துறைக்கு சொந்தமான காரை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த மாதம் 25ஆம் தேதி கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. காரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இருந்த நிலையில் அது யாருக்கு சொந்தமானது என காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.
வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில் மும்பை குற்றப்பிரிவு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சச்சின் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை அம்பானி வீட்டின் அருகே நிறுத்துவதற்காக மற்றொரு கார் மூலம் இழுத்து வந்துள்ளனர்.
விசாரணையில் அந்த கார் மும்பை காவல் துறைக்கு சொந்தமான கார் என தெரியவந்த நிலையில் அதனை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்துள்ளனர்.






