காதலியிடம் ராணுவ விஷயங்களை தெரிவித்த ராணுவ வீரர் கைது..!
முகநூலில் அறிமுகமான பெண் தோழியிடம் ராணுவ ரகசியங்களை கசிய விட்டதற்காக ராஜஸ்தானில் ராணுவ வீரர் ஒருவரை சிஐடி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த விவரம் பாகிஸ்தானுக்கு கைமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெண்கள் பெயரில் ராணுவ வீரர்களுக்கு வலைவீசி அவர்களிடமிருந்து ரகசியங்களை பெற சதி நடைபெறுகிறது. இதில் 22 வயதான ஆகாஷ் என்ற ராணுவ வீரரும் இந்த காதல் வலையில் விழுந்துள்ளார்.
அந்த பெண் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரகசியங்களை விலை பேசி விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






