--- --:--:-- --

மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் எஸ்டிபிஐ தொகுதிப்பங்கீடு பேச்சு

Kamal 02

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. திமுக அணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தாலும், இன்னமும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.

 

அதிமுக அணியை பொருத்தமட்டில், ஜி.கே. வாசனின் தமாகாவுடன் இன்னமும் உடன்பாடு செய்யப்படவில்லை. அத்துடன், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. அதேபோல், அமமுக, மக்கள் நீதிமய்யம் கட்சிகளில் இன்னமும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன், எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கூட்டணி அமைத்துள்ளது. இது தொடர்பாக ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி விவாதித்து வருகிறது.

 

எஸ்டிபிஐ கட்சிக்கு 15 முதல் 18 தொகுதிகள் வரை ஒதுக்க மக்கள் நீதி மய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும், எனினும், தங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குமாறு எஸ்டிபிஐ கட்டி வலியுறுத்தியதாகவும் ம.நீ.ம. கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.

 

மக்கள் நீத மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon