அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓவைசியின் அனைத்து இந்திய மஜ்லி சையத் ஹித்திகைதுல் முஸ்லிமின் கட்சிகளிடையே தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தமாகியுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி மாநில தலைவர் வக்கீல் அகமது தலைமையில் அந்த கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் குழு அமைத்து ஐந்து நாட்களுக்கு மேலாக பேச்சில் ஈடுபட்டு தற்போது அமமுகவுடன் கூட்டணிக்கு உடன்பட்டுள்ளனர்.
அமமுகாவின் தலைமையிலான கூட்டணியில் ஏஐஎம்ஐஎம் மையம் கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை அந்த கட்சியின் மாநில தலைவர் அறிக்கை மூலமாக உறுதி செய்துள்ளார்.
3 தொகுதிகளிலும் அந்த கட்சியின் சொந்த சின்னமான பட்டம் சின்னத்திலேயே போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






