அலங்கார விளக்கு வெடித்ததில் 4 வடமாநில தொழிலாளர்கள் காயம்..!
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் அமைக்கப்பட்டு வரும் அலங்கார விளக்கு வெடித்ததில் 4 வடமாநில தொழிலாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு நடைமேடை உடன் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து சில தினங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று மாலை பிரம்மாண்ட மின்விளக்குகளை அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அலங்கார விளக்கு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.






